விருது முதியவருக்கு! ஏன்?
கானரின் ஜமீன்தார் பூபதிராய் தனது பிறந்தநாளில் ஒரு இலக்கியக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார். பரமசிவாவைத் தொடர்ந்து நூறு கவிதைகள் பாடுபவருக்கு 'சரஸ்வதி புத்திரன்' என்ற பட்டமும் ஆயிரம் பொற்காசுகளும் வழங்கப்படும் என்று அறிவித்தார்.
இந்த போட்டியில் ரஜனிச்சந்திரா என்ற இருபத்தைந்து வயது இளைஞனும், நாராயண் சர்மா என்ற எண்பது வயது முதியவரும் சமமான திறமைசாலிகள் என்று நிரூபிக்கப்பட்டனர். இப்போது மகாராஜா யாரை வெற்றியாளராக அறிவிக்கப் போகிறார் என்பதைப் பற்றி சபையில் இருந்தவர்கள் அனைவரும் ஆர்வமாக இருந்தனர்.
ஜமீன்தார் யோசித்து நாராயண் சர்மாவை வெற்றியாளராக அறிவித்தார். அவருக்கு பட்டமும், ஆயிரம் பொற்காசுகளும் வழங்கப்பட்டன.
விழா முடிந்ததும் திவான் ஜமீன்தாரிடம், "மகாராஜா, நீங்கள் நாராயண் சர்மாவை வெற்றியாளராக ஆக்கினீர்கள்? இதற்குப் பின்னால் ஏதேனும் விசேஷ காரணம் உள்ளதா?" என்று கேட்டார். ஜமீன்தார் உடனே, "ஆமாம்! திவான்ஜி, ரஜனிச்சந்திரா இளைஞன். இந்த வருடம் இல்லையென்றால் அடுத்த வருடம் போட்டியில் மறுபடியும் கலந்து கொண்டு பட்டமும், பரிசும் பெறலாம். பாவம் நாராயண் சர்மா பழுத்த இலை! எப்போது விழுவான் என்று சொல்ல முடியாது. நாங்கள் நாராயண் சர்மாவை கௌரவிக்கவில்லை என்றால், அவரை கௌரவிக்கும் பாக்கியம் எங்களுக்கு கிடைத்திருக்காது. அத்தகைய பாக்கியத்திலிருந்து நாங்கள் ஒருவேளை விலகி இருந்திருப்போம்!
-ஆர். பத்மினி"