Bookstruck

லஞ்சம் வாங்குபவர்

ஒரு நாட்டில் பருத்தி அதிகமாக விளைந்தது. வெளிநாட்டில் உள்ள மக்கள் நிறைய விலை கொடுத்து பருத்தி வாங்குவார்கள். அதனால் பருத்தியின் விலை அதிகமாக போய்கொண்டே இருந்தது. நாட்டில் உள்ள தேவைகளை நிறைவேற்றுவதற்கு கூட பணம் இல்லாமல் இருந்தது. ஆகையால் ராஜா வெளிநாட்டுக்கு போகும் பருத்திக்கு வரி விதித்து, அதன்மேல் ஒரு கண் வைத்து வரியை வசூல் செய்வதற்காக ஒரு அதிகாரியை நியமித்தார். அவன் விவசாயிகளிடம் லஞ்சம் வாங்கிக்கொண்டு அவர்களுக்கு பிடிச்ச பருத்தியை ஏற்றுமதி செய்ய அனுமதித்தான். அவன் எல்லா கணக்கையும் தப்பா வெச்சுகிட்டான். மெல்ல மெல்ல அவன் விவசாயிகளிடம் அதிக லஞ்சம் வாங்க ஆரம்பித்தான். அதனால் விவசாயம் செய்வதற்கு ஆன செலவை கூட எடுக்க முடியாமல் விவசாயிகள் கஷ்டப்பட்டார்கள். ஆகையால் அவர்கள் எல்லாரும் ஒன்று சேர்ந்து வேளாண்மை அமைச்சரிடம் முறையிட்டனர். "இந்த நாட்டில் இருக்கிற அதிகாரிகள் எல்லாரும் பொய்யானவர்கள். இந்த பருத்திக்கான அதிகாரி ரொம்ப லஞ்சம் வாங்குறார். இவர எடுத்துட்டு வேற நல்ல அதிகாரிய நியமிங்க" என்று வேண்டிக்கொண்டனர். அமைச்சர் அனுதாபத்தோடு "நீங்கள் ஒவ்வொருவரும் எனக்கு ஆயிரம் ரூபாய் கொடுங்க. நான் அவன எடுத்துட்டு வேற ஒருத்தர நியமிக்கிறேன்," என்றார்.