Bookstruck

குள்ள ராட்சசி

சகுந்தலாவின் மாற்றாந்தாய் அவளைத் திட்டி அடித்தாள். பார்ப்பவர்களின் கண்களைக் கவரும் அளவுக்கு சகுந்தலா அழகாக இருந்தாள். ஆனால் அவளுடைய இரண்டு மாற்றாந்தங்கைமார்களும் மிகவும் அழகற்றவர்களாக இருந்தார்கள். "இந்த டாக்கினியால்தான் என் மகள்களுக்கு எங்கும் திருமணம் நடக்கவில்லை," என்று தாய் கூறினாள். சகுந்தலாவை கிராமத்தில் உள்ள ஒரு பணக்கார கிழவருக்கு திருமணம் செய்து வைக்க மாற்றாந்தாய் முடிவு செய்தாள். இருட்டியதும் அவள் வீட்டிலிருந்து வெளியேறி கிராமத்திற்கு வெளியே இருந்த புளியந்தோப்பை அடைந்தாள். அந்தக் காட்டில் ஒரு கிழவி வசித்து வந்தாள். கிழவிக்கு பூனை போன்ற கண்கள் இருந்தன. அவள் நெற்றியில் குங்குமப் பொட்டு இருந்தது. அவளுடைய சிவப்பு கலந்த பழுப்பு நிற முடி எப்போதும் அவிழ்த்து விடப்பட்டு பரவி இருந்ததால், கிழவி பயங்கரமாகத் தோன்றினாள். இரவு நேரத்தில் சகுந்தலாவைப் பார்த்த கிழவி அவளிடம், "நீ விறகு எடுக்க வரும்போது உன்னைப் பலமுறை பார்த்திருக்கிறேன்; ஆனால் இப்போது இரவில் எப்படி இங்கே வந்தாய்?" என்று கேட்டாள். சகுந்தலா தன்னுடைய சோகக் கதையை கிழவிக்குச் சொன்னாள். கிழவி சொன்னாள், "உன் மாற்றாந்தாய்க்கு உன் மீது இப்படி உரிமை கொண்டாட எந்த உரிமையும் இல்லை. நான் இங்கே தனியாகத்தான் இருக்கிறேன். நீ என்னுடன் இங்கேயே இரு." கிழவி அவளிடம் மிகவும் அன்பாக நடந்துகொண்டாள். சகுந்தலாவும் வீட்டு வேலைகள் அனைத்தையும் பார்த்து கிழவிக்கு நிறைய ஓய்வு கொடுத்தாள். கிழவி இப்போது ஓய்வாக இருந்தாள். கிழவிக்கு சொந்தமாக ஒரு மாட்டு வண்டி இருந்தது. ஒவ்வொரு மாதமும் இரண்டு மூட்டை காட்டில் உள்ள புளியை மாட்டு வண்டியில் எடுத்துச் சென்று நகரத்தில் விற்று வருவாள். அந்தப் பணத்தில் தனக்குத் தேவையான சில பொருட்களையும் வாங்கிக் கொள்வாள். இந்த முறை கிழவி அந்த வேலையை சகுந்தலாவிடம் ஒப்படைத்தாள். வண்டியில் புளி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு சகுந்தலா நகரத்திற்குப் புறப்பட்டாள். சகுந்தலா வண்டியில் அமர்ந்து காட்டுக்குள் சென்று கொண்டிருந்தபோது, திடீரென்று ஒரு குள்ள ராட்சசி எங்கிருந்தோ வந்து மாட்டு வண்டிக்கு முன்னால் குதித்து நின்று, கை தட்டி சந்தோஷமாக, "வாவ், என்ன அழகு, ஒரு பொம்மை மாதிரி மனதை மயக்குறியே!" என்றாள். ராட்சசி பார்ப்பதற்கு பயங்கரமாக இருந்தாலும், அவள் உடலால் மிகவும் குள்ளமாக இருந்ததால், எப்படியோ தைரியத்தை வரவழைத்துக்கொண்டு சகுந்தலா அவளிடம், "நான் தலைநகரில் புளியை விற்கப் போகிறேன். வழியிலிருந்து தூரமாகப் போ!" என்றாள். அவள் கோபமாகப் பேசியதால் ராட்சசியின் முகம் வெளுத்தது. மிகவும் பரிதாபமாக அவள் சொன்னாள், "அடி என் செல்ல பொம்மையே, என் மீது கோபப்படாதே. என்னையும் உன் கூட வண்டியில ஏத்திக்கோ! நான் ரொம்ப குள்ளமா இருக்கேனே, அதனால மத்த ராட்சசங்க என்னை பக்கத்துல கூட சேர்க்க மாட்டேங்குறாங்க. என்ன புறக்கணிச்சிட்டாங்க, அதனால இந்த மரத்துல உக்காந்து தனியா வாழறேன். ஆனா இந்த வாழ்க்கைல நான் ரொம்ப சலிச்சு போய்ட்டேன்!" சகுந்தலாவுக்கு அவள் மீது ரொம்ப பரிதாபம் வந்தது. அவள் சொன்னாள், "சரி பாரு, நான் உன்ன ஒரு மூட்டைக்குள்ள போட்டு மூட்டையோட வாய கயித்துல கட்டிடுறேன். உனக்கு காத்து கிடைக்கனும்னு இடையில இடையில கோணிப்பைல ஓட்டை போட்டு வைக்கிறேன். உனக்கு ஓகே தான? இப்போ சந்தோஷமா இருக்கியா ராட்சசி?" "என்ன? 'ராட்சசி'னு ஏன் கூப்பிடுற? என் பேரு 'யுவராணி'. நீ மூட்டையில ஓட்டை போடுவேன்னா, அது என் கண்ணுக்கு முன்னால வர மாதிரி போடு; அப்போதான் எனக்கு மனுஷங்க தெரிவாங்க. அவங்கள பார்த்து சந்தோஷப்படனும்," என்று குள்ள ராட்சசி சொன்னாள். சந்தைக்குப் போனதும் மூட்டைகளை வண்டியிலிருந்து இறக்கி, அவற்றின் அருகே நின்று சகுந்தலா கத்தினாள், "புளி வாங்க வாங்க! ஒரு மூட்டை ஐம்பது ரூபாய்!" தூரத்திலிருந்து ஒரு இனிப்பு கடைக்காரர் கத்தும் சத்தம் கேட்டுச்சு, "இனிப்பு வாங்க வாங்க!" சத்தத்தைக் கேட்ட ராட்சசி கேட்டாள், "இனிப்புன்னா என்னது? எனக்காக கொஞ்சம் வாங்கிட்டு வா! அதோட சுவை எப்படி இருக்குன்னு பாக்கணும்!" அருகில் வெல்லம் விற்றுக் கொண்டிருந்த பையனைத் தன்னுடைய மூட்டைகளின் மீது கண் வைத்துக்கொள்ளச் சொல்லிவிட்டு சகுந்தலா இனிப்பு வாங்கப் போனாள். இடைப்பட்ட நேரத்தில் இனிப்பு கடைக்காரர் இனிப்பு விற்றுக் கொண்டே தூரம் போயிருந்தார். கடைசியில் அவனைப் பிடித்து இனிப்பு வாங்கிக் கொண்டு வருவதற்கு சகுந்தலாவுக்கு அரை மணி நேரம் ஆனது. திரும்பி வந்து பார்த்தால் வண்டியில் மூட்டைகள் இல்லை! சகுந்தலா பயந்தாள். இங்கே அங்கே பார்த்துக்கொண்டிருக்கும்போது வெல்லம் விற்ற பையன் அவளிடம் வந்து நூற்றி ஐம்பது ரூபாயை அவள் கையில் கொடுத்து சொன்னான், "உன்னோட புளி எல்லாம் ரொம்ப ஈஸியா வித்துடுச்சு. ராஜாவோட சில வீரர்கள் மார்க்கெட்டுக்கு வந்திருந்தாங்க, அவங்க உன் புளிய வாங்கிகிட்டு போய்ட்டாங்க. ராஜகுமாரிக்கு கல்யாணம் அதான்!" அவன் சொன்னதைக் கேட்டு சகுந்தலாவுக்கு வியர்த்து கொட்டியது. 'பாவம் அந்த குள்ள ராட்சசி நம்மள நம்பி நம்ம கூட வந்தாளே! வீரர்கள் இப்ப அவள எப்படி என்ன பாடுபடுத்துவாங்கன்னு தெரியலையே! கையில இருக்கிற வேல் கம்பு வச்சு குத்துவாங்க இல்லனா உயிரோட எரிச்சுருவாங்க!' இப்படி மனசுல நினைச்சு பயத்துல நடுங்க ஆரம்பிச்சா. சகுந்தலா உடனே அரண்மனைக்கு நடக்க ஆரம்பித்தாள். அருகில் சென்றதும் சில பெண்களும் ஆண்களும் காய்கறிகள் மற்றும் மற்ற சில சாமான்களைத் தலை மேலேயும் முதுகு மேலேயும் சுமந்துகொண்டு போறத பார்த்தா. எல்லாரும் அந்த மூட்டைகள அரண்மனைக்குப் பின்னால இருக்கிற தோட்டத்துக்குப் பக்கத்துல இருக்கிற வெட்டவெளியில இறக்கிகிட்டிருந்தாங்க. சகுந்தலாவும் ஒரு மூட்டைய தலையில தூக்கிட்டு அங்க போனா. தன்னோட புளி மூட்டைகள் அங்க ஒரு மூலையில இருக்கிறத பார்த்தா. தலையில இருந்த மூட்டைய அங்கேயே இறக்கிற மாதிரி இறக்கி தன்னோட மூட்டைங்க பக்கத்துல போனா, மெதுவா 'யுவராணி, யுவராணி'னு கூப்பிட்டா. அதுல ஒரு மூட்டைக்குள்ள இருந்த ராட்சசி அவள கேட்டா, "இனிப்பு வாங்கிட்டு வந்துட்டியா?" ராட்சசி பாதுகாப்பா இருக்கிறத தெரிஞ்சுகிட்ட சகுந்தலா நிம்மதி பெருமூச்சு விட்டு சொன்னா, "யுவராணி, நாம திடீர்னு ஒரு ஆபத்துல மாட்டிகிட்டு இருக்கோம். இப்போ நாம ராஜ அரண்மனையோட வளாகத்துல இருக்கோம். இருட்டினதும் இங்கிருந்து தப்பிக்க வழி தேடணும். நான் உன் பேருல கூப்பிடுற வரைக்கும் அசையாம படுத்துரு. இந்த ஆபத்துல இருந்து பத்திரமா தப்பிச்சோம்னா அப்பறம் இனிப்பு சாப்டுக்கலாம்." என்று அந்த மூட்டையோட கயித்தை அவுத்துட்டு அங்கிருந்து விலகி போய்ட்டா. சூரியன் மறைஞ்சு இப்போ கொஞ்ச கொஞ்சமா இருட்ட ஆரம்பிச்சது. சகுந்தலா தப்பிக்க வழி தேடிக்கிட்டு தோட்டத்துக்கு போனா, அங்க ஒரு பொண்ணு சோகமா உக்காந்துருக்கிறத பார்த்தா. அவளோட உடைங்கள பாத்து 'இவதான் இளவரசியா இருக்கனும்'னு நினைச்சா. அவ பக்கத்துல போயி அவள கேட்டா, "இளவரசி, நாளைக்கு காலையில உங்களுக்கு கல்யாணம், ஆனா நீங்க இப்படி சோகமா உட்கார்ந்து இருக்கீங்க! உங்களுக்கு இந்த கல்யாணம் பிடிக்கலன்னு தெரியுது. கரெக்ட் தான?" திடுக்கிட்டு இளவரசி சொன்னா, "நீ யாரு? எனக்கு இந்த கல்யாணம் பிடிக்கலன்னு உனக்கு எப்படி தெரியும்?" சகுந்தலா சிரிச்சிகிட்டே சொன்னா, "ஒரு மாசத்துக்கு முன்னாடி நானும் இந்த நிலைமையில இருந்தேன். பிடிக்காத கல்யாணத்துல இருந்து என்ன காப்பாத்திக்கிறதுக்காகத்தான் நான் வீட்ல இருந்து ஓடி வந்துட்டேன்." இத கேட்டதும் ராஜகுமாரியோட கண்ணுல தண்ணி வந்துச்சு. கோயில்ல கற்சிலைங்க செய்ற ஒரு இளைஞன அவ லவ் பண்ணிட்டு இருந்தா. ஆனா இந்த விஷயத்த தன்னோட அம்மா அப்பா கிட்ட சொல்ற அளவுக்கு தைரியம் அவளுக்கு இல்ல. அதனால அவங்க முடிவு பண்ண ஒரு தேசத்தோட இளவரசனுக்கு அவள கல்யாணம் பண்ணி வைக்க போறாங்க. "ஆனா இப்படி கல்யாணம் பண்ணிகிட்டு என்ன பண்றது? அம்மா அப்பாக்கு இந்த கல்யாணத்துல உனக்கு விருப்பம் இல்லன்னு சொல்றதுக்கு தைரியம் இல்லன்னா, நேரடியா அந்த இளவரசன்கிட்ட எல்லாத்தையும் சொல்லிரு இளவரசி!" சகுந்தலா இளவரசிக்கு வழி காட்டுனா. சகுந்தலாவோட ஐடியா இளவரசிக்கு பிடிச்சிருந்தது. தன்னோட மோதிரத்த கழட்டி சகுந்தலாவோட கையில குடுத்துட்டு சொன்னா, "இது உன் விரல்ல இருந்துச்சுன்னா ராஜ அரண்மனையில நீ எங்க வேணாலும் போகலாம். எப்படியாவது நீ சிங்பூரியோட அந்த இளவரசன இங்க கூட்டிட்டு வா." கொஞ்சம் யோசனை பண்ணிட்டு சகுந்தலா சொன்னா, "இங்க கூட்டிட்டு வந்தா யாராவது பாக்கலாம். வெளியில திடல்ல கல்யாணத்துக்கான சாமான்கள் கெடக்கு. அங்க போயி ஒரு மூலையில நீங்க ஒளிஞ்சுக்குங்க. நான் இளவரசன அங்க அனுப்புறேன்." என்று அங்கிருந்து போனா. கதவுல இருந்த காவலாளிகளுக்கு மோதிரத்த காட்டி எந்த தடையுமில்லாம இளவரசனோட கெஸ்ட் ஹவுஸ்க்கு போனா. யாருக்கும் தெரியாம சகுந்தலா ராஜகுமாரியோட மோதிரத்த காட்டி இளவரசன்கிட்ட சொன்னா, "ராஜகுமாரி இப்போ உடனே சில முக்கியமான விஷயங்கள பத்தி உங்ககிட்ட பேச விரும்புகிறாள். நீங்க என்னோட வாங்க." அவர கூட்டிட்டு போய் இளவரசி ஒளியுற இடத்த காமிச்சா, தானும் ஒரு மரத்துக்கு கீழ நின்னா. கொஞ்ச நேரம் கழிச்சு இளவரசன் திரும்பி வந்தான், அவனோட கண்ணு கோபத்துல சிவப்பா இருந்துச்சு. சகுந்தலா கிட்ட திரும்பி வந்ததும் அவளோட பேர கேட்டான். பயந்துக்கிட்டே தன்னோட பேரு 'சகுந்தலா'ன்னு சொன்னா. "சகுந்தலா, நீ எனக்கு ரொம்ப புடிச்சிருக்க. இளவரசி எனக்கு எப்படி தெரிஞ்சான்னு என்ன கேட்காத. என் கல்யாணத்துக்கு முடிவு பண்ண நேரத்துல நீ என்ன கல்யாணம் பண்ணிக்கிறியா? நீ பாக்குறதுக்கு ஒரு கந்தர்வ கன்னிகை மாதிரி அழகா இருக்க," இளவரசன் சகுந்தலா கிட்ட சொன்னான். இளவரசன் கேட்டத கேட்டு சகுந்தலா அதிர்ச்சி ஆனா. தன்ன பத்தி அறிமுகப்படுத்திட்டு சொன்னா, "எந்த விதத்துலயும் நான் உங்களுக்கு தகுதியானவ இல்ல." "உன்னோட இந்த மறுப்புனாலதான் நீ எவ்ளோ நல்ல குணம் உள்ளவன்னு எனக்கு தெரியுது! இப்ப நான் உறுதியா முடிவு பண்ணிட்டேன் கல்யாணம் பண்ணிக்கிட்டா உன்னதான் பண்ணிப்பேன்!" இளவரசன் உறுதியா சொன்னான். இந்த விஷயம் கொஞ்ச நேரத்துல அந்தப்புரத்துக்கு போச்சு. தன்னோட பொண்ணு தன்னோட காதல் பத்தி அவங்ககிட்ட எதுவுமே சொல்லலன்னு ராஜா-ராணி ரொம்ப வருத்தப்பட்டாங்க. தன்னோட கடமைய புரிஞ்சுகிட்டு அதே நேரத்துல அவங்களோட பொண்ணுக்கு சிற்பியோடயும் இளவரசனுக்கு சகுந்தலாவோடயும் கல்யாணம் பண்ணி வச்சாங்க. ராஜா சகுந்தலா மேல ரொம்ப சந்தோஷமா இருந்தாரு, அவள பார்த்து சொன்னாரு, "நீ என் பொண்ண காப்பாத்திட்ட. இல்லன்னா அவ என்ன பண்ணிருப்பாளோ யாருக்கு தெரியும்! என்ன வேணும்னு கேளு?" "மகாராஜா, கல்யாண சாமான்கள் எந்த திடல்ல இருக்கோ, அதுல என்னோட மூணு மூட்டைகள் இருக்கு. அதுல ஒரு மூட்டைய மட்டும் எனக்கு எடுத்துக்கோங்க. வேற எதுவும் வேணாம்," சகுந்தலா தன்னோட ஆசைய சொன்னா. அவளோட ஆசைய கேட்டதும் எல்லாருக்கும் பெரிய ஆச்சரியம். ராஜா அவளுக்கு எந்த மூட்டை வேணுமோ எடுத்துக்க அனுமதி கொடுத்தார். குள்ள ராட்சசி இருக்கிற சகுந்தலா கேட்ட மூட்டை ரதத்துல வச்சாங்க. போகும் போது அவ தங்குற மரம் தெரிஞ்சதும் சகுந்தலா ரதத்த நிறுத்த சொன்னா. மூட்டைய பாத்து சொன்னா, "யுவராணி, உன்னோட இருப்பிடம் வந்துடுச்சு. மூட்டையிலிருந்து வெளியில வா. இப்போ நமக்கு எந்த ஆபத்தும் இல்ல." மூட்டையிலிருந்து வெளிய வந்த குள்ள ராட்சசிய பாத்து இளவரசன் அதிர்ச்சியானான்! அவன கேட்டான், "உன் பேரு 'யுவராணி'யா?" "ஆமா." என்று சொல்லிட்டு ராட்சசி தலைய ஆட்டுனா, ஒரு குதி குதிச்சு மரத்தோட கிளையில போய் உக்காந்துட்டா. நடந்த உண்மை என்னன்னா - ராத்திரி இருட்டுல ராஜகுமாரன் ரெண்டு தடவ 'யுவராணி, யுவராணி'ன்னு கூப்பிட்டதுக்கு அப்புறம் இந்த ராட்சசி அவன் முன்னாடி வந்துச்சு. அவள பாத்து 'நாம ஏமாந்துட்டோம்'னு ராஜகுமாரனுக்கு தோணுச்சு. இங்க இருக்குற ராஜகுமாரி பகல்ல மனுஷ ரூபத்துலயும் ராத்திரில ராட்சஷ ரூபத்துலயும் வந்துட்டு போறாளோன்னு அவனுக்கு தோணுச்சு. இந்த யோசனைல அவன் ரொம்ப கோவப்பட்டான், அதனாலதான் அவன் சகுந்தலாவ கல்யாணம் பண்ணிக்க முடிவு பண்ணான். நடந்த எல்லா விஷயத்தையும் அவன் சகுந்தலா கிட்ட சொன்னான். அவன் இன்னும் சொன்னான், "இந்த குள்ள ராட்சசியாலதான் நாம கல்யாண பந்தத்துல ஒன்னா சேர்ந்துருக்கோம். இந்த புண்ணியத்தினால அவளுக்கு அடுத்த பிறவி இளவரசியா கிடைப்பா." என்று சந்தோஷமா சிரிச்சான்.